இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்பன மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் குறித்த 3 நாடுகளும் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
யுத்த நிறுத்தத்தை கடைபிடித்தல் மற்றும் இரு தரப்பிலுமுள்ள பணயக்கைதிகளை விடுவித்தல் என்பன தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த 3 நாடுகளும் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தை தயாரித்துள்ளன. அதில் அமுல்படுத்தல் பற்றிய விபரங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எகிப்தின் கெய்ரோவில் நடைபெறவுள்ள முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் ஹமாஸ் இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை.