மரவள்ளி கிழங்கு உண்பது பலருக்கும் தெரிந்த விடயம் ஆனால் மரவள்ளி இலைகள் பயன்பாட்டினை நாம் அறிந்துள்ளமை மிகவும் குறைவு தான். ஆனால் மரவள்ளி இலையில் செய்யப்படும் உணவுதான் ஆபிரிக்க மக்களின் பிரதான உணவாக உள்ளதாம். இந்த தகவல் நமக்கு வியப்பை அளித்துள்ளது.
இலங்கையின் வடக்கு பகுதி மக்களின் பாரம்பரிய உணவுகளில் மரவள்ளிகிழங்கும் ஒன்றாகும். அது மட்டுமல்லாது இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர்க் காலத்தில் பலரின் பசியை போக்கியிருந்ததும் இந்த மரவள்ளிக்கிழங்குதான்.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று
மரவள்ளிக் கிழங்கின் இலைகளை கொதிக்க வைத்து, கஷாயம் தயாரித்து பருகி வந்தால் நமக்கு ஏற்படும் லேசான காய்ச்சல் பறந்து போகும். உடலில் ஏற்படும் காயங்களுக்கு மரவள்ளிக் கிழங்கு இலையில் உள்ள பசையை பிழிந்து எடுத்து, காயங்கள் மேல் பூசுவதால், சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
மரவள்ளி கிழங்கின் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்துக்கொண்டால் கூடுதல் சுவையைத் தரும். அதேவேளை எமது பிரதேசத்தில் தனிப்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ReeCha Organic Farm இல் மரவள்ளியும் பயிரிடப்படுகின்றது.
அதோடு பிரான்ஸில் உள்ள நிறுவனம் ஒன்றுடக் கைகோர்ந்த்து மரப்வள்ளி இலைகளை தாயத்தில் இருந்து ReeCha ஏற்றுமதியும் செய்கின்றது. எனவே வடக்கில் வாழும் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் குப்பைகளில் வீசும் மரவள்ளி இலைகளையும் ReeCha கைகோர்த்து நீங்கள் இனி காசாக்கி பார்க்கலாம்.