வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளர் மக்கள் சந்திப்பாக உரும்பிராய் தெற்கு கிராமத்தில் உள்ள செல்வபுரம் யோகபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்கள், மக்கள் ஆகியோரை செல்வபுர உதயசூரியன் பொதுமண்டபத்தில் நேற்று 14.02.2024 சந்தித்தார்.
இதில் பிரதேச செயலாளர் சிவசிறி ஐயா, உதவி பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர், விளையாட்டு அலுவலர், இளைஞர் கழக அலுவலர் சிறுவர் பிரிவு அலுவலர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மக்களின் கருமங்களுக்கு இடையூறாக செயற்படும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராக அரச உதவி திட்டங்களை நிறுத்துவது தொடர்பாக யோசிப்போம் என்று கூறினார். அதிக போதைவஸ்து பாவனையாளர்களை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்புவது தொடர்பாகவும் செய்ற்படுத்துவோம் என்று கருத்தையும் கூறினார்.
டெங்கு தொடர்பாக உரும்பிராய் தெற்கு பிரிவிற்கு வருகை தந்த போது கிராமத்தில் ஆங்காங்கு மேடுகளாக இருந்த குப்பை மேடுகள் உடனடியாக அகற்றிவித்தார். பல ஆண்டுகளாக யார் உரிமையாளர் என்று அறியப்படாத காணிகள் பலவும் துப்புரவு செய்யப்பட்டது. செயல்வீரர் என்ற கருத்து மக்கள் மத்தியில் அவர் வருகை தந்த போதே பேசப்பட்டது.
அடவாடி இளைஞர்களுக்கு எதிராக ரோந்து நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுபதாகவும், சிவில் பாதுகாப்பு குழுவின் ஊடாகவும் பொலிசாரும் இணைந்து கசிப்பு விற்கும் நபர்களை கைது செய்வோம் என கோப்பாய் பொலிசாரால் கூறப்பட்டது.
இந்த கிராமத்தில் போதைவஸ்து வியாபாரிகளுக்கு அரச உதவி திட்டமும், ஏனையோருக்கு இல்லை என்றும் மக்கள் சார்பாக கூறப்பட்டது. அதற்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதேச செயலாளர் கூறினார்.
இந்த கிராமத்தில்.இவ்வாறனா கலந்துரையாடல் சிறப்புக்குரியது, என்றும் பிரதேச செயலாளரின் ஆக்கபூர்வாம செயலில் நம்பிக்கை உண்டு எனவும், எமது கிராமம் சிறப்பாக வரும் என்ற கருத்தையும் மக்கள் சார்பாக கூறப்பட்டது.
இதுவரை போதைக்கெதிராக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் மேனன் அவர்களுக்கும், அவர் குழுவுக்கும், கோப்பாய் பொலிஸ் பிரிவு பெண் பொலிஸ் சக்தி அவர்களுக்கும் கோப்பாய் பொலிசாருக்கும் மக்கள் சார்பாக வாழ்த்துகள் கூறப்பட்டது.
இந்த கலந்துரையாடல் செல்வபுரம் யோகபுரம் ஆகிய கிராமத்தில் அடவாடியில் ஈடுபடும் இளைஞர்களுக்கும், போதைவஸ்து வியாபாரிகளுக்கும் பெரும் சாவலாகவும் இந்த கிராமம் முன்னோக்கி செல்லவும் மிக முக்கிய சந்தர்ப்பம் ஆகும்.