நுவரெலியா மாவட்டத்தில் உதவும் உணவுகள் பாதுகாப்பு வேலை திட்டத்தின் கீழ் மஸ்கெலியா சமநெலிய சிங்கள பாடசாலையில் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களினால் 1000 பயன் தரும் பலா கன்றுகள் நடும் விழா இன்று காலை 10 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் சமநெலிய சிங்கள பாடசாலையின் அதிபர் திரு.அருணசாந்த.
அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன சுசீத்த வின் மத அனுஷ்டானத்துடன் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட மற்றும் உதவி அரசாங்க அதிபர் சித்தாரா கமகே நுவரெலியா உதவி உதவி அரசாங்க அதிபர் சுஜீவாபோதிமான உட்பட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஜ.எம்.ஓ.எச் . அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் கந்தையா விக்னேஸ்வரன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சமநெலிய சிங்கள பாடசாலையில் உள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த பலா கன்றுகள் நடும் திட்டம் இன்று வைபவ ரீதியாக ஆரம்பமானது.
நிகழ்வில் உரையாற்றிய நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட இவ்வாறு கூறினார்.
உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இப் பகுதியில் உள்ள சமநெலிய சிங்கள பாடசாலையில் உள்ள காணியில் சுமார் 1000 பலா கன்றுகள் நடும் திட்டம் இன்று ஆரம்பம் செய்வதினால் எதிர் வரும் ஜந்து ஆண்டுகளில் இப் பகுதியில் உள்ள மக்களுக்கு பாணி உள்ள பலாப்பழம் முறையாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இந்த கன்றுகள் அனைத்தும் பாதுக்காக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் வித்தியாலய அதிபர் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர்.எஸ்.ராஜவீரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் செயளாலர் சமன் சந்திரசிறி, உதவி அரசாங்க அதிபர் சித்தாரா கமகே மற்றும் பலர் உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக பலா கன்றுகள் நடுகை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.