யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் 1/12/2024 அன்று கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் இன்று பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
கடந்த 1/12/2024 அன்று கைது செய்யப்பட்டு 2/12/2024 நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் இன்று வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு இடம்பெற்றது.
குறித்த வழக்கிற்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றிற்கு முன்வைத்து விவாதத்தின் அடிப்படையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த 30/11/2024 அன்று கற்கோவளம் பகுதியில் கிராம சேவகரிடம் பிள்ளைகளுக்காக உண்வு கோரியவேளை ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த கிராமசேவகர் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே குறித்த வழக்கு இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.