முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (02) காலை உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் ஆவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த இளைஞன் தனது தாயுடன் ஒன்றாக வசித்து வந்துள்ள நிலையில், சம்பவத்தன்று தாய் வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய போது இளைஞன் வீட்டிற்கு அருகில் உள்ள 15 அடி ஆழமுடைய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்திருப்பதை கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.