திருகோணமலை, பூநகர் பிரதேசத்தில் 02 கஜமுத்துக்களுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடவத்தை, அரலகங்வில, கம்பஹா மற்றும் கோனஹேன ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35, 37, 42 மற்றும் 69 வயதுடையவர்கள் ஆவர்.
ஈச்சிலம்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.