சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் ஒரு பகுதியை அந்த நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, குறித்த நகரத்தில் 50 சதவீதமான பகுதியைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது சிரியாவில் பல ஆண்டுகளாக இடம்பெறும் அரச எதிர்ப்புத் தாக்குதல்களில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. அதேநேரம், குறித்த பகுதியை மீளக் கைப்பற்றுவதற்கு அரச படைகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.