மாலை 6:05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பப்பட்டு பிரதான பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. மாவீரனின் சகோதரன் பிரதான சுடரை ஏற்றி வைக்க ஏனையோர் தமது உறவினருக்கான நினைவுச் சுடர்களை ஏற்றி மலர் தூவி, மலர் மாலை அணிவித்து கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர். கொட்டும் மழையிலும் பல நூற்றுக் கணக்கானோர் கலந்து தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.