மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீர் தேக்கங்களின் இன்று மதியம் முதல் மதகுகள் மூலம் வெளியேறுகிறது.
குறிப்பாக விமலசுரேந்திர கென்யோன் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மதகுகள் வழியாக வெளியேறுகிறது.
கன மழை பெய்தது வருவதால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட அதிகரித்து உள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
அந்த அதிகாரி மேலும் கூறுகையில் களனி கங்கையை அன்டி உள்ள மக்கள் மற்றும் மகாவலி கங்கையின் கரையோர பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அவர் மேலும் கேட்டு கொள்கிறார்.
இப் பகுதியில் அதிக அளவில் பணி மூட்டம் காணப் படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டு கொள்கின்றனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.