தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் மகிழுந்து நேற்று (26) மாலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தின் போது குறித்த மகிழுந்தில் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவை, மீண்டும் ஏற்றிச் செல்ல சாரதி வருகை தந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.