திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளை தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுமதிப்பதற்கான நேர்முக பரீட்சை இன்று (26) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் தொழில் செய்வதற்கு ஆர்வமுள்ள மாற்றுதிறனாளிகள் இந்நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.வட கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல இடங்களில் குறித்த தொழிற் பயிற்சி நிலையம் அமையப் பெற்றுள்ளது இதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான பல தொழில்வாண்மையான பாடநெறிகள் இதன் மூலம் நடாத்தப்பட்டு வருகிறது. எதிர் காலத்தில் இவ்வாறான மாற்றுத் திறனாளிகள் ஏனையோருடன் தங்கி வாழாமல் தாங்களே தொழில் வாண்மை கொண்ட பயிற்சியாளராக சுயமாக தொழில் செய்து வாழக் கூடிய ஒரு பாட நெறியாக விளங்குகிறது.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தொழிற்பயிற்சி நிலையங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.