நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரையிலும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 500 மேற்பட்டோர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக, 35 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இது விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் தடுக்கப்படக்கூடிய நோயாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.