மட்டக்களப்பு கோட்டைமுனை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து கிடந்த வயோதிபர் ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.
60 – 70 வயது மதிக்கத்தக்க 5 அடி 03 அங்குலம் உயரமுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.