மத்திய மலை நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக இன்று நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாய நிலங்கள் மற்றும் பல வீதிகள் நீரில் மூழ்கிய நிலையில் உள்ளது. அத்துடன் பல்வேறு வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் விவசாயம் செய்யும் விவசாயிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சகல நீர்த் தேக்கங்களினதும் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. எனவே எந்த நேரத்திலும் பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விட வாய்ப்புண்டு. அதன் காரணமாக தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மண் திட்டுகள் உள்ள பகுதி மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
ராகல,கந்தபொல, நுவரெலியா, டயகம, சாமிமலை, லக்சபான, வாழமலை, நல்லதண்ணி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.