வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்வதினால் புதுக்குடியிருப்பில் இருந்து முல்லத்தீவுக்கு செல்லும் பிரதான வீதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ் வீதி ஊடாக செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு செல்லும்போது ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது. எனவே பொது மற்றும் தனியார் போக்குவரத்து பயணிகள் குறித்த பாலத்தினை பயன்படுத்துவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளைக்கு செல்ல கேப்பாபிலவு ஊடாக மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை நீடிக்குமாக இருந்தால் இந்த வீதி ஊடாக போக்குவரத்து முழுமையாக பாதிப்படைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. அத்துடன் ஒரு சில தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.