காலி, நாகொட பத்தேகம வீதியில் ஜின் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலத்தைத் திருத்திக் கொண்டிருந்த போது பாலம் இடிந்து விழுந்ததில் நேற்று (21) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
பாலத்தின் நடுக் கம்பிகளில் சிக்கிக் காயமடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.