காலியிலிருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த தொடருந்தில் இன்று (22) காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
பூஸ்ஸ தொடருந்து நிலையத்திற்கு அருகில், தொடருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை வேளையில் இயங்கும் அலுவலக தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.