கண்டி, ஹரகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகயீனமுற்று 9 சிறுமிகள் இன்று வியாழக்கிழமை (21) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஒன்பது சிறுமிகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் நேற்று புதன்கிழமை (20) இரவு உணவுடன் மரவள்ளிக்கிழங்கு உட்கொண்டுள்ள நிலையில் திடீரென சுகயீனமுற்றுள்ளனர். இதனையடுத்து சுகயீனமுற்ற சிறுமிகள் அனைவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.