யால தேசிய வனத்தின் கோனகங்கார பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்ட மூன்று கஞ்சா தோட்டங்களை சுற்றிவளைத்த போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் மற்றும் 190,000 கஞ்சா செடிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய தகவலுக்கமைய காவந்திஸ்ஸபுர பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 36, 30 மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் குறித்த வனப் பகுதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் 3 இடங்களில் சட்டவிரோதமாகக் கஞ்சா செடிகளைப் பயிரிடப்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்கார பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.