கிண்ணியாவைச் சேர்ந்த இலக்கியவாதியும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிண்ணியாவின் முதல் தமிழ் விசேடதுறை பட்டதாரி ஆசிரியருமாக உலா வரும் கலா என்ற புனைபெயரில் அழைக்கப்படும் எச்.எம். ஹலால்தீன் என்பவருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான “கிழக்கு மாகாண இலக்கிய வித்தகர்” விருது கிடைக்கப்பெற உள்ளது.
பெரிய கிண்ணியாவைச் சேர்ந்த அயாத்து முகமது ரோஜா நோனா தம்பதிகளின் நான்காவது புதல்வரான இவர் ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்திலும் உயர்தர கல்வியை கிண்ணிய மத்திய கல்லூரியிலும் கற்றுக்கொண்டார்.
1989 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் சித்தியடைந்து பேராதனை பல்கலைக்கழகத்துக்குள் 1991 ஆம் ஆண்டு நுழைந்தார். அங்கு அவர் தமிழ் மொழியை விசேட மொழியாக கற்றுக் கொண்டதோடு சில காலங்கள் காலி ருஹுனு கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகவும் கடமை ஆற்றினார்.
சிறுவயது முதல் சமூக சேவை மற்றும் கலை இலக்கிய துறையில் ஆர்வம் கொண்ட இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், விமர்சனம், நாட்டார் கலைகட்டில் சிறுவர் இலக்கிய படைப்பு பாடல் ஆக்கம் முதலானவற்றில் ஆர்வம் காட்டியதோடு எழுதியும் வந்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் போட்டி பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று ஆசிய நியமத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழ் மொழி பாடத்திற்கான ஆசிரியர் ஆலோசகர் போட்டி பரீட்சையில் அதி கூடுதலான புள்ளிகளை பெற்று கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தின் ஆசிரியர் ஆலோசகராக பணியாற்றினார்.
ஆசிரியர் ஆலோசகராக கடமை ஆற்றி குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பின்னர் மீண்டும் ஆசிரியராக புண்ணிய ஆல்மினா மஹா வித்தியாலயத்தில் கடமையாற்றி வருகின்றார்.
2013 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கிய படைப்புக்காக தேசிய விருதை பெற்றுக் கொண்டதோடு இதுவரைக்கும் 12 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
1997 ஆம் ஆண்டு இவருடைய முதலாவது சிறுகதை தேவி சந்த ரோஜா என்ற தலைப்பில் முதல் முதலாக வெளிவந்தது இதற்கு முன்னர் சஞ்சிகைகளிலும் ஏனைய வெளியீடுகளிலும் வந்துள்ளன.
1905 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான ” இளங்கதிர்” இதழின் இதழ் ஆசிரியராக செயற்பட்டுள்ளார்.
சீனா இலங்கை நட்புறவுச் சங்கம், ஜப்பான் இலங்கை மேம்பாட்டுச் சங்கம் அகில இலங்கை ரீதியில் நடத்திய கட்டுரை போட்டியில் பங்கு பற்றி பரிசில்களையும் பெற்றுள்ளார்.
வீரகேசரி, சக்தி டிவி, சக்தி எஃப் எம் முதலான வெற்றி பிராந்திய செய்தியாளராகவும் கடமையாற்றி வருகின்றார். அகில இலங்கை சமாதான நீதிவானாகிய இவர் தேச கீர்த்தி, கலைதாரகை முதலான பட்டங்களையும் பெற்றுள்ளார்.
சுமார் 28 வருட கால இலக்கிய பயணங்களின் மூலமாக பெற்றுக்கொண்ட அடைவாகவே கிழக்கு மாகாண “இலக்கிய வித்தகர் விருது” 2024.11.28 ஆம் திகதி திருகோணமலை உவர்மலை விவகானந்தா வித்யாலயத்தில் வழங்கப்பட உள்ளது.
இவர் கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் தலைவராகவும் திருகோணமலை மீடியா போரத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.