பிரபல தொழிலதிபரும் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் நேற்று மாலை காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கிருபாகரன் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் யாழ்ப்பாண பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் கிருபா பயிற்சி பாடசாலையில் ஆரம்பித்து இதுவரை 09 கிளைகளை உருவாக்கி தொழில் முயற்சியாளர்களையும் ஊக்குவித்தார்.
இவரது பூதவுடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் வீதியிலுள்ள வீட்டிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.