தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸிக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு குறைப்பாட்டு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்திய அணிக்கு எதிரான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி துடுப்பாடிய 15 ஆவது ஓவரில் ஜெரால்ட் கோட்ஸி வீசிய பந்தொன்றினை நடுவர் அகலப்பந்தாக அறிவித்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸ் நடுவருடன் பொருத்தமற்ற கருத்துகளைப் பரிமாறியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜெரால்ட் கோட்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் குறைப்பாட்டு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.