பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, மற்றுமொரு பெண்ணை படுகாயமடையச் செய்த சந்தேக நபர் ஒருவர், தனது வீட்டுக்குச் சென்று திங்கட்கிழமை (18) உயிர்மாய்த்துள்ளார்.
வண்ணான்குளம், லபுனோறுவ பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய பெண் ஒருவரும் 30 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாகவே தாக்குதல் இடம்பெற்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுராதபுரம் வைத்தியசாலையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.