ருஹுணு பல்கலைக்கழகத்தில் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (19) முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு கோரி இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று காலை 9.00 மணி ருஹுணு பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.