தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுக் கிளிநொச்சியில் அக்கராயன் கரித்தாஸ் குடியிருப்புக்கு மரக்கன்றுகளை வழங்கியுள்ளது.
வடக்கு மாகாணசபை 2014ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. இதனை ஆண்டுதோறும் தவறாது கடைப்பிடித்து வரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இக்காலப்பகுதியில் பொதுமக்களுக்கும், பொது அமைப்புகளுக்கும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிவருவதோடு, மரக்கன்றுகளை நடுகை செய்தும் வருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.11.2024) அக்கராயனில் கரித்தாஸ் குடியிருப்பு மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைத்துக் குடும்பங்களுக்கும் மாமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் உ.நிறோஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கிவைத்துள்ளனர்.