நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன்.சுதன் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதி மக்களை நேற்று 17.11.2024 சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் தேர்தலில் வாக்களித்த, மற்றும் வாக்களிக்காத மக்களுக்கு நன்றி கூறியதுடன் ஆனை விழுந்தான் பகுதி மக்களின் நிறைவேற்றப்படாத அடிப்படை தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அப்பகுதி மக்களின் சில தேவைகளை நிவர்த்தி செய்ய தன்னாலான உதவிகளை செய்வதாக உறுதி அளித்ததுடன் பொன்.சுதன் அவர்களால் அறநெறிக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த சந்திப்பில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், அறநெறி பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.