ரஷ்யா கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு உக்ரேன் மீது பாரிய ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று காலை உக்ரேனின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போது உக்ரேனில் குளிர்கால பருவநிலை ஆரம்பித்துள்ள நிலையில், மின்சார வசதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடாத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் உக்ரேனில் பல பகுதிகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
120 ஏவுகணைகள் மற்றும் 90ற்கும் அதிகமான ஆளில்லா விமானத் தாக்குதல்களால் உக்ரேனின் மேற்கு பகுதியில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.