பதுளை செங்கலடி பிரதான வீதியின் பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது பாரிய கற்களும் மரங்களும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த மண்சரிவினை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.