மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆடு ஒன்றினை திருடி சென்ற நபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக ஆட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் (15) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், மூளாய் தண்ணீர் தொட்டியடி பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை நேற்றையதினம் (16)கைது செய்தனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.