காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து நேற்று புதன்கிழமை (13) தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
காலி, அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த கைதி சிறைச்சாலையின் சமையல் அறையில் உணவுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.