இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையிலும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனானிலும் தாக்குதல் நடாத்தி வருகிறது.
இதன்படி, காசா முனையில் கடந்த 24 மணித்தியாலத்தில் நடாத்தப்பட்ட இஸ்ரேலின் வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, லெபனான் நாட்டின் தெற்கு பெய்ரூட் பகுதிகளில் போர் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.