திருகோணாமலை மாவட்டத்தில் தேர்தல் எவ்வாறு நடைபெற இருக்கின்றது என்பது தொடர்பாக அறிந்து கொள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று(12) கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்டு கள நிலவரங்கள் பற்றி அறிந்து கொண்டது.
குறித்த குழுவானது ஊடகவியலாளர்களுடன் இது சம்பந்தமான விடயங்களை பற்றி கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டது.
சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வளையமைப்பின் (Asin network for elections) ANFREL மலேசியா நாட்டைச் சேர்ந்த மொஹம்மட் அஷ்ரப் ஸரபி தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஏ எல் அஷ்ரப் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
திருகோணாமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, தேர்தல் காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள உள்ளார்கள். வேட்பாளர்கள் எவ்வாறான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டார்கள் முதலான விடயங்களை இக்குழுவினர் அறிந்து கொண்டனர்.