எல்பிட்டிய – பிட்டிகல பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் சிகிச்சைகளுக்காக எல்பிட்டிய மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தில் மத்தக பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர்.
குறித்த 4 பேரும் அண்மையில், வீடொன்றிலிருந்த சட்டவிரோத மதுபானத்தை அருந்தியிருந்தனர். இதனையடுத்து, ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகக் குறித்த நால்வரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.