அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர் ஒருவரின் தொலைபேசி அழைப்புகளை சீன ஹேக்கர்கள் (Hackers) இரகசியமாகக் கேட்டதாக FBI அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த தொலைபேசி அழைப்புகள் வழக்கறிஞருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களாக இருப்பதால் ட்ரம்ப் இந்த சம்பவத்தால் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.