இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு, 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செயப்பட்டுள்ளனர்.
இதில் இந்திய கடற்றொழிலாளர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்றொழில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.