யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக பஞ்ச புராணம் ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து தெய்வீக இன்னிசை கச்சேரியை யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைப்பீட மாணவன் திலக்சன் சிவராஜ மனோகரன் அவர்கள் வழங்கினார். அதற்கு அணி சேர் கலைஞர்களாக கீபோட் – இன்னிசைக் கலைமணி நடேசு செல்வச்சந்திரன், மிருதங்கம் – நாதமணி ம.லோகேந்திரன், தபேலா – வித்துவான் M.பிரபா ஆகியோர் அணிசெய் கலைஞர்களாக இணைந்திருந்தனர்.
இதேவேளை ஆனைக்கோட்டை இந்து சமய விருத்திச் சங்கத்தால் நடாத்தப்பட்டவிருக்கும் பரிசளிப்பு விழாவிற்காக ரூபா 42,000 பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்
யா/அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ரூபா 15,000 பெறுமதியான நூல்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை கந்தசஷ்டி காலத்தில் உபவாச விரதம் அனுஸ்டித்தோர்க்கு ரூபா இரண்டு மில்லியன் செலவில் தீர்த்தம் தயாரிப்பதற்காக பழவகைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.