அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து 2வது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை நியமித்துள்ளமை உலக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை சூசி நிர்வகித்துள்ளார்.
சூசி வைல்ஸை பற்றி ட்ரம்ப் கூறுகையில்,
அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசி வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார். என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவும் அவர் இருந்தார். அத்துடன் உலகளவில் போற்றப்படுகிறவர். அத்துடன், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சூசி தொடர்ந்து அயராது உழைப்பார் என நம்புகிறேன்.
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட சூசி தகுதியானவர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் 32வது தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.