யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி பூநகரி பிரதேசங்களின் நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் ஆறுகள் குளங்களையும் தூர்வாரி நீர்த் தேக்கங்களை உருவாக்கி நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன், நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு மேற்கொண்டு மீன் பிடியை ஊக்குவிப்பதுடன், கல்வி, விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்குபற்ற ஏற்பாடு செய்வேன் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஆயள்வேத வைத்தியர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று வடமராட்சி மந்திகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.