திவுலப்பிட்டிய, பல்லபான பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பலாங்கொடை மற்றும் பல்லேபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.
திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 700 பூச்சிக்கொல்லி மருந்துப் பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.