ஜனநாயக கட்சியின் கமலா ஹரிசினை தோற்கடித்து குடியரசுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார்.
இந் நிலையில் அவரது ஆதரவாளர்கள வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
எங்கள் தேசத்தின் காயங்களை ஆற்றப்போகின்றோம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆதரவாளர்கள் மத்தியில் மேலும் தெரிவிக்கையில்,
இது அமெரிக்காவின் பொற்காலமாக அமையும். இது அமெரிக்க மக்களிற்கு மிகவும் அற்புதமான வெற்றி, இது அமெரிக்காவை மிகப் பெரிதாக்க உதவும்.
நீங்கள் ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் இந்த நாளை மிகவும் முக்கியமான நாளாக கருதுவீர்கள். அமெரிக்கா எங்களிற்கு மிகவும் வலுவான முன்னொருபோதும் இல்லாத ஆணையை தந்துள்ளது என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.