தொம்பே பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் புதையல் தோண்டிய 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் ஹெய்யன்துடுவ, சியம்பலாபே, தெல்கொட, மல்வான, தொம்பே, கேகாலை, ஹோமாகம, கடுவெல, கிரிந்திவெல, அம்பன்வல மற்றும் ஹன்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் வந்த கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.