காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் கட்டப்பட்டிருந்த இரு மாடுகளை திருடிச் சென்று பாலமுனை நடுவோடையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து அவற்றை வெட்டி வெளியாட்களுக்கு விற்பனை செய்ய தயாரான நபர்கள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட போது தப்பியோடி உள்ளனர்.
தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ.ரஹீம் தெரிவித்தார்.
சுற்றிவளைக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 60 கிலோ இறைச்சி மற்றும் மாடுகளை வெட்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மாட்டு இறைச்சி மற்றும் உபகரணங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸாரால் அழிக்கப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.