இந்த முறை பெரும்போகத்திற்காக உர நிவாரணம் வழங்கல் செயற்பாடு ஆரம்பமாகியுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உர நிவாரணமாக விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதாகவும், அதில் 15,000 ரூபாய் என்ற முதற் கட்ட நிவாரணம் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.