காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (5) காலை 8 மணி முதல் காலவரையறையின்றி பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவரின் முறையற்ற நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வைத்தியசாலையில் பணிப்பாளர்,
குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட வைத்தியரை இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு ஏற்கனவே தீர்மானித்துள்ளது. அதன்படி, வைத்தியரை மஹரகம வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான எழுத்துமூல அறிவித்தல் இன்று பிறப்பிக்கப்படும் என்றார்.
இதற்கு முன்னரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் உரிய தீர்வுகள் எதுவும் வழங்கப்படாததால், வைத்தியர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.