நாட்டில் சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக 12 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (05) மாலை 6.00 மணி முதல் மறுநாள் புதன்கிழமை (06) காலை 6.00 மணி வரையான 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜா – எல, கட்டுநாயக்க, சீதுவை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கந்தானை, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.