ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகல் – கெப்பிட்டிகல வீதியில் கரந்தகொல்ல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (02) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக ரிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குருணாகல் அம்பகொட பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின்போது மோட்டார் சைக்கிளின் செலுத்துநர் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ரிதிகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.