ஸ்பெயினின் – வெலன்சியா பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. அத்துடன், மீட்பு பணிகளில் இதுவரை சுமார் 500 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தற்போதும் ஸ்பெயினின் பல பகுதிகளில் மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.