பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது முதலாவது பாதீட்டை நேற்று (30) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பிரித்தானிய அரசாங்கம் 30 வருடங்களில் அறிமுகப்படுத்திய மிகப்பெரிய வரி அதிகரிப்பை முன்மொழிந்தமை இதன் விசேட அம்சமாகும்.
தனது பாதீட்டு திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த அவர், பொதுச் சேவையின் வீழ்ச்சிக்கு முன்னைய பழமைவாத நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்.
அதன்படி, ஆண்டுக்கு 40 பில்லியன் பவுண்டுகள் வரி அதிகரிக்கப்படும் என்று அவர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.