யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார். சிறிது காலம் திருந்தி வாழ்ந்த நிலையில் அவர் நேற்றுமுன்தினம் மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து ஹெரோயினை உள்ளெடுத்தார். இதையடுத்து வாயிலிருந்து நுரை தள்ளிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.